அறிவியலின் மகளாய் பிறந்து, அமெரிக்காவில் வளர்ந்து இன்று நம் பட்டி தொட்டி எங்கும் நீக்கமற நிறைந்திருந்து, மன பலத்தையும் , அறிவையும், உழைப்பையும் மட்டும் நம்பியிருந்த பலகோடி இளம் நம்பி நங்கைகளுக்கு, தொழிலாய் அமைந்து பொன்னான வாழ்வளித்திருக்கும் கணினிக்கு நமது வாழ்நாள் நன்றி!
கணினியை என்னை போன்று தொழிலுக்காகவோ, அல்லது பொது-சுய உதவிக்காகவோ பயன்படுத்தும் எல்லா கைகளுக்கும் வணக்கம்.
ஒருநாள் ஆய்வகங்களிலும், பணம் புரளும் அலுவகங்களிலும் மட்டுமே ஆராதிக்கப்பட்டவள், இன்று நம்மூர் மருந்து கடை தொட்டு, பீடி சிகரட் கடை வரை வலை விரித்திருப்பது நிதர்சனம்.
இவ்வளவு அரிய வளர்ச்சியை சீரமைக்க, மேம்படுத்த, கண்காணிக்க, பரவலாக்க, எத்துணையோ கைகள் உழைக்கின்றன.
கணினி தொழிலும், கட்டிட வேலை போன்று பரவலானதலும், ஆங்கில அறிவை பெற்ற ஒரு சிலரே செய்ய முடியும் என்கிற ஆணவத்தாலும், இத் துறையை நாடும் பல போலிகள் பெருகிவிட்டன.
எதோ ஒரு, டுடோரியல் சென்டெரில் ஆறு மாதம் படித்துவிட்டு, ஒன்றோ இரண்டோ சான்றிதழ்களை பெற்று கொண்டு , தானும் ஒரு Sofware Engineer என்று சொல்லிக்கொண்டு எத்துணையோ வேடதாரிகள் பிழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இத்துறையின் பொறுப்பு, நான்கு வரி code, கூகிள்-இருந்து சுட்டு, copy paste செய்துவிட்டு QA வை கையில் போட்டுகொண்டு - Defects free Delivery - செய்வதோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை.
இதையும் தாண்டி, இதன் அடிப்படையை புரிந்து, இவள் அழகை, பெருமையை உண்மையாய் ரசித்து, இன்னும் ஒரு படி மேல் கொண்டு செல்ல துடிக்கும் ஒரு சில நெஞ்சங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
இத்துறையின் பொறுப்பு ஒரு நல்லாசிரியரை போன்றது. ஒரு ஆசானின் தவறால் எப்படி ஒரு இளம் சமுதாயமே பாதிக்கபடுகிறதோ, அங்ஙனம் பெருகிவரும் சாப்ட்வேர் கருப்பு ஆடுகளால், கணினியின் நலன் மட்டுமின்றி, நம் நாட்டின் நாளைய வளர்ச்சியும் கூட பாதிக்கபடலாம்.
ஆகையால், ஒவ்வொரு கணினி வல்லுனரும் - குறிப்பாக இந்திய கணினி வல்லுனர்கள்-
தமது பொறுப்புணர்ந்து, எவ்வழியில் இத்துறையில் நுழைந்திருந்தாலும், இனிமேலாவது ,இதன் அருமை உணர்ந்து, செம்மையான வளர்ச்சிக்கான வழிகளை சிந்தித்து செயல் ஆற்றுவோமாக.
இப் பொறுப்பே இப்பதிவை தொடங்குவதற்கான உந்து சக்தி. பின்வரும் நோக்கங்களுக்கான நமது சிந்தனைகளை இங்கே பகிர்வோமாக.
* கலையாக பயிலுதல் & பயிற்றுவித்தல்
* நுணுக்கங்கள்
* திட்ட மேலாண்மை & செய்முறை
* நம்ம ஊர் பயன்படிற்கான கருவிகள்
இப்பதிவு, கணினியையும் அதன் பயன்பாட்டையும், அதன் வளர்ச்சியையும் ஆராதிப்பவர்களுக்கு காணிக்கை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment